Passive income (செயலற்ற வருமானத்தின் சக்தியைத் திறத்தல் ஒரு தொடக்க வழிகாட்டி)

ரிசர்வ் வங்கி இன்று முதல் முறையாக டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தும் நிலையில், சிலர் இதை கிரிப்டோ கரன்சி எனத் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்.
உலகெங்கும் கடந்த சில ஆண்டுகளாக க்ரிப்டோ கரன்சிகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை பிட்காயின் தொடங்கி வைத்த நிலையில், அதன் பின் பல க்ரிப்டோ கரன்சிகள் இப்படி வெளிவரத் தொடங்கியது.
இருப்பினும், இந்த கிரிப்டோ கரன்சிகளை பல நாடுகள் சந்தேகத்துடன் தான் அணுகின. ஏனென்றால், கிரிப்டோ கரன்சிகள் எந்தவொரு நாட்டின் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிலும் வரவில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை முதலில் கிரிப்டோ கரன்சிகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும், பலரும் அதை வைத்து சூதாட்டம் போல டிரேட்டிங் செய்யத் தொடங்கியதால் இதற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. நேரடியாக கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யவில்லை என்றாலும் கூட அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து டிரேட் செய்யவே முடியாத வகையில் மாற்றிவிட்டன.
அப்போதே கிரிப்டோ கரன்சிகளை போல ரிசர்வ் வங்கியே தனியாக இ-கரேன்சியை வெளியிடும் என அறிவித்து இருந்தது. இந்நிலையில், அந்த டிஜிட்டல் ரூபாய் இன்று முதல் அமலுக்கு வந்து இருக்கிறது. முதலில் மொத்த விற்பனையில் இந்த டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அடுத்த மாதம் இதை சில்லறை வர்த்தகத்திலும் கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டு இருக்கிறது. படிப்படியாக இதை நாடு முழுக்க விரிவுபடுத்தத் திட்டமிட்டு உள்ளன.
மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) அல்லது டிஜிட்டல் ரூபாய் என்று அழைக்கப்படும் இது ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளின் டிஜிட்டல் வடிவம் என்று சொல்லலாம். அதாவது இந்த டிஜிட்டல் ரூபாய் என்பது பணத்தின் மின்னணு வடிவமாகும். ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இதை நாம் பயன்படுத்தப்படலாம். இந்தாண்டு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்ல் செய்யும் போது, விரைவில் ரிசர்வ் வங்கி தனது டிஜிட்டல் நாணயத்தை வெளியிடும் என்று அறிவித்து இருந்தார்.
இப்போது அது புழக்கத்திற்கு வந்து இருக்கிறது. இது மொத்த விற்பனை, சில்லறை விற்பனை என இரண்டு வகையில் வெளியிடப்பட்டு உள்ளது. CBDC-R எனப்படும் சில்லறை விற்பனை டிஜிட்டல் ரூபாயை அனைவரும் பயன்படுத்தலாம். அதேநேரம் CBDC-W எனப்படும் மொத்த விற்பனை டிஜிட்டல் ரூபாயை நிதி நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அடுத்து பலருக்கும் டிஜிட்டல் ரூபாய்க்கும் கிரிப்டோ கரன்சிக்கும் என்ன வேறுபாடு என்ற சந்தேகம் வரும் அதையும் பார்க்கலாம்.
கிரிப்டோ கரன்சி என்பது பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பரவலாக்கப்பட்ட டிஜிட்டல் சொத்து. இதை நாம் மற்றவருக்கு எளிதாக அனுப்ப முடியும். இருப்பினும், இது எந்தவொரு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே சர்ச்சைக்கு காரணமாக இருந்தது. அதாவது கிரிப்டே கரன்சிகளின் செயல்பாடு என்பது எந்தவொரு வங்கிகள், நிதி நிறுவனங்கள் அல்லது மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்குள் வராது.
அதேநேரம் ரிசர்வ் வங்கி இன்று வெளியிடும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (சிபிடிசி) ரூபாயின் டிஜிட்டல் பதிப்பு மட்டுமே. இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், 'டிஜிட்டல் ரூபாய் என்பது பிட்காயின், எத்தேரியம் மற்றும் பிற கிரிப்டோ கரன்சிகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். ஏனென்றால் அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். எனவே, இதற்கு எப்போது இருக்கும். ஒரு டிஜிட்டல் ரூபாய் என்பது எப்போதும் ஒரு ரூபாய்க்கு இணையான மதிப்பையே கொண்டு இருக்கும்' என்றார்.
மற்றொரு முக்கிய வேறுபாடு கிர்போட கரேன்சிகளின் விலை தாறுமாறாக மாறும். உதாரணமாகக் கடந்த ஜூன் 1இல் ரூ.25 லட்சமாக இருந்த ஒரு பிட்காயின் மதிப்பு இப்போது 16.8 லட்சமாகச் சரிந்து உள்ளது. இப்படி மாறிக் கொண்டே இருந்தால் தொழில் செய்வது கடினம். அதேநேரம் டிஜிட்டல் ரூபாயின் மதிப்பு எப்போதும் ரூபாய் மதிப்புக்கு நிகராகவே இருக்கும். இதனால் தொழில் செய்வதில் பிரச்சினை எதுவும் இருக்காது.
மேலும், டிஜிட்டல் நாணயத்தை யாராலும் சேதப்படுத்த முடியாது. ரூபாய் நோட்டுகளின் காலம் என்பது குறிப்பிட்ட ஆண்டுகள் வரை தான். ஆனால், டிஜிட்டல் ரூபாய்க்கு இப்படி கட்டுப்பாடுகள் இல்லை. ரிசர்வ் வங்கி கடந்த சில ஆண்டுகளாகவே டிஜிட்டல் நாணயத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து வருகிறது. இதை படிப்படியாக நாடு முழுக்க கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டு உள்ளனர்.
01nov2022
இந்திய அரசால் வெளியிடப்படும் டிஜிட்டல் கரன்சியைச் சென்டரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி என அழைக்கப்படுகிறது. இது ரூபாய் நோட்டு போலவே இந்திய அரசால் அறிமுகம் செய்யப்படும் டிஜிட்டல் பணம். இந்தப் பணத்தைத் தற்போது நாம் பயன்படுத்தும் வகையிலேயே பயன்படுத்தலாம், அதேபோல் முழுக்க முழுக்க அரசு கட்டுப்பாட்டில் இயங்க கூடியவை.
கருத்துகள்
கருத்துரையிடுக