Passive income (செயலற்ற வருமானத்தின் சக்தியைத் திறத்தல் ஒரு தொடக்க வழிகாட்டி)

படம்
 Passive income  செயலற்ற வருமானத்தின் சக்தியைத் திறத்தல் ஒரு தொடக்க வழிகாட்டி (Passive-செயலற்ற) (This content only for educational purpose) நீங்கள் தூங்கும் போது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எப்போதாவது கனவு கண்டிருக்கிறீர்களா? இது உண்மையாக இருப்பது மிகவும் நன்றாகத் தோன்றலாம், ஆனால் அதுவே செயலற்ற வருமானத்தின் கவர்ச்சியாகும். இந்த உற்சாகமான உலகிற்குள் நுழைந்து, தானியங்கி விமானத்தில் நீங்கள் எவ்வாறு செல்வத்தை உருவாக்கத் தொடங்கலாம் என்பதைக் கண்டுபிடிப்போம்! செயலற்ற வருமானம் என்றால் என்ன? செயலற்ற வருமானம் என்பது ஒரு அயராத ஊழியர் உங்களுக்காக 24/7 வேலை செய்வது போன்றது. இது குறைந்தபட்ச தொடர்ச்சியான முயற்சியால் சம்பாதிக்கப்பட்ட பணம், பெரும்பாலும் முதலீடுகள் அல்லது வணிக முயற்சிகளிலிருந்து, ஆரம்ப வேலை முடிந்த பிறகும் தொடர்ந்து வருவாயை ஈட்டுகிறது. ஆண்டுதோறும் பழம் தரும் ஒரு மரத்தை நடவு செய்வதை கற்பனை செய்து பாருங்கள்-அது சுருக்கமாக செயலற்ற வருமானம்! பிரபலமான செயலற்ற வருமான ஆதாரங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகள் நீங்கள் சொத்துக்களை வாங்கி வாடகை வசூலிக்கும் அந்த பழைய பலகை விளையாட்டை நினைவில் ...

எலான் மஸ்க் வாழ்க்கை பயணம்-elon musk life story

எலான் மஸ்க் வாழ்க்கை பயணம்

elon musk life story:




எலான் மஸ்க் ஒரு சிறந்த தொழிலதிபர் மற்றும்  கண்டுபிடிப்பாளர்  மற்றும் முதலீட்டாலரும் ஆவார் தற்பொது space x மற்றும் tesla ஆகிய இரண்டு நிறுவனத்திற்கும் முதன்மை செயல் அதிகாரியாக அதாவது Chief ஆகவும் இவர் உள்ளார் அதுமட்டுமில்லாமல் தற்போதைய உலகின் 2021 கணக்கின்படி உலகின் 2-வது மிகப்பெரிய பணக்காரராக இவர் இருக்கிறார் . இவர் ஜுன் 28 1971 ல் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர் தந்தை எரோல் மஸ்க் ஆவார் தாய் மயே மஸ்க் ஆவார் இவரின் தாய் தந்தையர் இவருக்கு 8 வயதிலேயே விவாகரத்து வாங்கி பிரிந்துவிட்டனர் . இவர் தந்தை ஒரு பொறியாளராக பணிபுரிந்தவர். பிறகு தனது தந்தையுடன் கனடாவிற்கு இடம்பெயருகிறார் மஸ்க் கனடாவில் குவின்ஸ் பல்கலைகழகத்திலும் பென்சில்வேனியா பல்கலைகழகத்திலும் இளங்கலை படித்தார். பிறகு கலிபோனியா ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் சேர்ந்தார் ஆனால் படிப்பை தொடரவில்லை .


எலான் மஸ்கின் தொழில்நுட்பங்கள்


   எலான் மஸ்க் 1999 ஆம் ஆண்டு PAYPAL நிறுவனத்தை X.COM என்று தெடங்கினார். 2013 Hyper circle என்ற அதிவிரைவு மின்காந்த ரயிலை புதியதாக உருவாக்க நினைத்தார். இந்த ரயிலில் மிக வேகமாக செல்வதற்காக குறைந்த அழுத்த குழாய்கள் வழியாக ஒரு மணி நேரத்தில் 700 மைல்கள் அதி வேகமாக செல்ல முடியும். இது விமானங்களை விட அதி விரைவாக செல்லும். இந்த திட்டம் நிறைவேற 10 ஆண்டுகள் கூட ஆகலாம் என குறிப்பிடுகிறார். Artificial intelligence ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கி அதிலும் சிறப்பாக செயலெபட்டு வருகிறார் . இவர் மனித மூளையில் பொருத்தும் நியுராலிங் என்ற கருவியை கண்டு பிடித்து மனிதமூளையை மென்பொருளுடன் இணைக்கும் வகையில் ஒரு அதி நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கவும் முனைப்புடன் உள்ளார்.


எலானின் குழந்தை பருவம்


      இவர்   சிறுவயதிலேயே அதிகம்  புத்தகங்களை படிக்கும் திறன்மிக்கவராக இருந்துள்ளார். அவர் நூல்நிலையத்தில்  தான் அதிகம் இருப்பாரம் இதனால் அங்குள்ள  அனைத்து புத்தகங்களையும் படித்து  முடித்துவிடுவாராம் .rocket, space, ,innovation ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர்.அவர் புத்தகங்களை படித்ததினாலே அனைத்தையும் தெரிந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். எலான் மஸ்க் சிறுவயதில் ரொம்ப அமைதியான ஒருவராக இருந்தார். இவரை பலரும் சிறுவயதில் அதிக அவமானபடுத்தி உள்ளனர் . இதனால் பல அவமானங்களை சந்தித்துள்ளார். இவரை ஒருநாள் மாடியில் இருந்து தள்ளி அவரை மருத்துவமனையில் சேர்க்கும் வகையில் அடிபட்டுள்ளது. பல முறை அழுதுள்ளாராம். பல கஷ்ட்டங்களை சிறுவயதிலேயே அனுபவிதுள்ளார். எலான் மஸ்கிற்கும் அவர் தந்தைக்கும் அடிக்கடி சண்டை வருமாம் அவர் தந்தை அதிகம் குடிப்பாராம் அதனால் அவர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சிறுவயதிலிருந்தே அவருக்கு துனையாக இருந்தது புத்தகங்கள் மட்டும்தான்.


மஸ்கின் முதல் தொழில்


 அப்போதைய காலகட்டத்தில்  கணிணி மொழி மிக கடினம் ஆனால் சிறுவயதில் எந்த ஒரு ஆசிரியரும் இல்லாமல் தாமாகவே கணினி மொழியை தாமாகவே புத்தகம் வழியே கற்று கொண்டார்.  இவர் தனது சந்தேகத்தை ஆசிரியரிடம்  கேட்டபொழுது சந்தேகத்தை ஆசிரியரால் கூட சொல்ல இயலவில்லை  அதனாலே இவர் தாமாகவே கணிணி மொழியை கற்றுகொண்டார். இவ்வாறு கற்றுகொண்டு கணினி மொழி பயன்படுத்தி ஒரு பதிய computer game யை 12 வயதிலேயே உருவாக்கினார். சிறுவயதில் அவர் யாரிடமும் அதிகம் நண்பராக பழகவில்லை. இவர் அதிக நேரம் தனிமையாக இருந்துள்ளார்.


     அவர் காலத்தில்   இணைய(Web) வளர்ச்சி அதிகம் இருப்பதனால் அவர் அதன் மீது கவனத்தை செலுத்தினார். இதனால் மென்பொருள் தொழிலை ஆரம்பித்தார். பிறகு 1999 ல் இணைய வழியில் பணபரிமாற்றம் செய்யும் முறையை கண்டுபிடித்தார்.இது சீராக செல்லும் போது மற்றொரு பணபரிமாற்றம் செய்யும் நிறுவனத்துடன் இணைத்து கண்டார். இதன் காரணமாகவே paypal உருவானது.


 செவ்வாய் கிரகத்தில் 

     செவ்வாயில் மனிதர்களை குடியேற்றம் செய்ய வேண்டும் எனபது அவரது முக்கிய கனவாக இருந்தது. ரஸ்யாவிற்கு சென்று ராக்கெட் வாங்க வேண்டும்  என்று விஞ்ஞானியிடம் கூறும்போது  ஒரு ராக்கெட்டின் விலை  8 மில்லியன் டாலர் தேவைபடும் என்று கூறினார்கள். இதை கேட்டு துவண்டு விடாத மஸ்க் ராக்கெட் பாகங்களை வெளியில் வாங்கினால் தான் அதிக விலை வரும் அதை நாமே தயாரித்தால் என்று எண்ணி space X என்ற நிறுவனத்தை 2001-ல் உருவாக்கினார். செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முதல் படி இதுவே, அதுபோல் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் முதல் தனியார் நிறுவனம் இதுவே ஆகும் 


இந்த நிறுவனத்தின் முதல் ராக்கெட்  விண்ணில் சென்ற 8 நிமிடத்திலேயே வெடித்து சிறந்தது. அதை கண்டு துவண்டு போகாத எலான் மஸ்க் ஒரு மீண்டும் ராக்கெட்டை அனுப்பினார் அது பூமி சுற்றுவட்ட பாதையில் சென்று இன்ஜின் கோளாறு காரணமாக வெடித்து சிதறியது. துவண்டு போகாத எலான் மஸ்க் NASA விடம் ஒரு ராக்கெட்டை வாங்கி விண்ணுக்கு அனுப்பினார். ஆனால் அதுவும் தோல்வியடைந்தது. பிறகு TESLA Vehicle நிறுவனத்தை 70 மில்லியனிற்கு வாங்கினார். மின்சாரத்தில் இயங்கும் காரை தயாரிக்க TESLA என்ற கம்பெனியை உருவாக்கினார். இவர் அனைத்து காசுகளையும் செலவு செய்ததால் அவர் நிறைய கடனாளியாகிவிட்டார் . இதன் காரணமாக அவர் மனைவி அவரை விவாகரத்து வாங்கிகொண்டார். அன்றைய காலகட்டதில் நிறைய தோல்விளை சந்தித்த நபராக மஸ்க் இருந்தார். இருந்த கொஞ்ச நஞ்ச காசுகளையும் முதலீடு செய்து இறுதியாக ஒரு இராக்கெட்டை செலுத்தினார் அந்த இராக்கெட் மட்டும் தோல்விடைந்தால் அவரின் அனைத்து நிறுவனங்களும் திவாலாகிவிடும் இருப்பினும் அந்த மியற்சியை அவர் மேற்கோண்டார் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் அந்த இராக்கெட் விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக தரையிரங்கியது.


  பிறகு இந்த வெற்றியின் காரணமாக  NASA இவரை அனுகியது. NASA விற்கான இராக்கெட் உற்பத்திக்கு இவரிடம் ஒரு ஒப்பந்தத்தையும் பொட்டுகொண்டது .பிறகு நிறைய ராக்கெட்களை அனுப்பி வெற்றி அடைந்தார். பிறகு TESLA நிறுவனமும் வெற்றி பாதையில் சென்றது. மின்சார கார்களை தாயாரித்து அதிக லாபம் பெற்றார். அவருக்கு இத்தகைய எண்ணம் தோன்ற முக்கிய காரணமாக இருந்தது ISAAC ASIMOV அவர்களின் புத்தகத்தை படிப்பதன் மூலமே என கூறியுள்ளார். இவ்வாறு பல தோல்விகளுக்கு பிறகு வெற்றியை அடைந்தார். அதுபோல் அவர் இன்னும் நிறைய விடங்களை செய்யவும் உள்ளார் அதில் ஒன்றுதான் செவ்வாயில் மனிதர்களை வாழ வைக்க வேண்டும் என்ற அவருடைய கனவு அதுவும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.


Read more click a link:

              Tesla moters


                   PayPal



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Passive income (செயலற்ற வருமானத்தின் சக்தியைத் திறத்தல் ஒரு தொடக்க வழிகாட்டி)

Blog (வலைபதிவு)பிளாக் என்றால் என்ன?

தங்க வரலாறு (Gold history)