Passive income (செயலற்ற வருமானத்தின் சக்தியைத் திறத்தல் ஒரு தொடக்க வழிகாட்டி)

பில்கேட்ஸ் முழுப் பெயர் வில்லியம் ஹென்றி கேட்ஸ். 1955 அக் டோபர் 28-ஆம் நாள் சீயாட்டில் (வாஷிங்டன்) நகரில் பிறந்தவர். தந்தை வில்லியம் சட்ட நிறுவனமொன்றின் பங்குதாரர்.
தாய் மேரி மாக்ஸ்வல். படிக்கிற காலத்திலேயே சந்தித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள்.
பில்கேட்ஸுக்கு படிப்பில் அத்தனை ஆர்வமில்லை. பாடப் புத்தகங்களை விட 'டார்ஜான்' மாதிரி கதைகள் படிக்கவும், ரூஸ்வெல்ட் நெப்போலியன் மாதிரி பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகள் படிக்கவும் விருப்பம்.
11 வயதிலேயே அபார ஞாபக சக்தி உள்ளவர் அவர். 13 வயதில் கம்ப்யூட்டரின் செயல்முறைகள் அத்துப்படி. 17 வயதில் ஒரு கோடை விடுமுறையில் பித்தான்கள் (குடியரசுத் தலைவர் கால பித்தான்கள்) வாங்கி விற்றார்.
ஒவ்வொரு பித்தானையும் 5 சென்ட் விலை கொடுத்து 5000 பித்தான்கள் வாங்கியிருந்தார். அந்தப் பித்தான்களுக்கு கிராக்கி வந்த போது ஒரு பித்தான் 25 டாலர் என்று விலை வைத்து விற்றார்.
பில்கேட்ஸ் கம்ப்யூட்டரில் காட்டிய அக்கறையை உடம்பின் சுத்தத்திலோ வீட்டுவேலையிலோ காரோட்டுவதிலோ காட்டியதில்லை.
கம்ப்யூட்டரில் ஏதாவது ப்ரொக்ராம் செய்து கொண்டே இருக்க வேண்டும் அவருக்கு ஸ்கூலில் அவர் கட்டணம் செலுத்தாமலே கம்ப்பூட்டரை உபயோகித்துக் கொள்ள அனுமதித்திருந்தார்கள்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த போதே தன்னுடைய நண்பர் ஆலனுடன் சேர்ந்து மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார்.
அப்போது அவருடைய வயது 12. கம்பெனி நன்றாக இயங்கவும், கேட்ஸ் படிப்பை விட்டுவிட்டார். தொழிலில் புதிய உத்திகளைப் புகுத்துவதும், உற்பத்திப் பிரிவை கவனித்துக் கொள்வது ஆன்லைன் வேலை.
கேட்ஸ் புதிய பிசினஸ் ஒப்பந்தம், பேரம் இவற்றைக் கவனித்துக் கொண்டார். வேறு சில நண்பர்களையும் தம்முடைய நிறுவனத்தில் கூட்டாக சேர்த்துக் கொண்டார். 0:40 விகிதத்தில் தமக்குச் சாதகமாய் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்.
ஆப்பிள் கம்ப்யூட்டர், கமோடர் நிறுவனங்களுக்கு ப்ரொக்ராம்கள் எழுதித் தந்து பதினெட்டே மாதங்களில் பல லட்சம் டாலர்களை அவர்கள் சம்பாதித்து விட்டனர்.
அப்போது உ.பி.எம் நிறுவனம் தான் அதிக அளவில் கம்ப்யூட்டர்களைத் தயார்த்துக் கொண்டிருந்தது. அவை ரொம்ப பெரிய சைஸ்', தனிநபர் உபயோகத்துக்கு ஏற்றதாயில்லை.
பி.லஸி தயாரிப்பில் இறங்கிய போது அதிவேக ப்ரொக்ராம்களை அளிக்கக்கூடிய ஆப்ரேடிங் சிஸ்டத்தை கேட்ஸ் உருவாக்கித் தந்தார். முழு உரிமையைத் தாமே வைத்துக் கொண்டு, பயன்படுத்துகிற உரிமையை மட்டுமே ஐ.பி.எம்முக்குத் தந்தார்.
அவர்கள் ப்ரொக்ராமைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் அவருக்குப் பணம் கொடுப்பதாய் ஒப்பந்தம். அதன் மூலம் பல கோடி டாலர்கள் கேட் ஸிற்கு கிடைத்தது, இன்றும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
போட்டியாளர்களை எப்படிக் கையாள்வதென்று அவருக்குத் தெரியும். ஒன்று, எதிரியை வளைத்துப் போடுவார் அல்லது செயலற்றுப் போகச் செய்வது விடுவார். அதுவே அவருடைய வெற்றி ரகசியம்.
1986-ல் கேட்ஸ் பல நூறு கோடிகளுக்கு அதிபர், 1200 ஊழியர்களும் சவுகரியமாய் வேலை பார்க்க புதிய வேலையிடம் உருவாக்கப்பட்டது.
1990-ல் விண்டோஸ் 3.0 அறிமுகம். மைக்ரோசாஃப்டின் ஆண்டு வருமானம் 100 கோடி டாலர்களைத் தாண்டியது. 1992-ல் மைக்ரோசாஃப்டின் பங்குகள் கிடுகிடு வென்று உயர்ந்தன.
கேட்ஸ் அமெரிக்காவின் முதன்மைக் கோடீஸ்வரரானார். 1995-ல் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர். இன்று அவருடைய சொத்தின் மதிப்பு இரண்டரை லட்சம் கோடி. கேட்ஸின் வளர்ச்சி அசுரத்தனமானது, மற்ற நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல்.
அத்தனை வளர்ச்சியை அவரால் எப்படி எட்ட முடிந்தது? மூளை பலம், நிறுவன ஊழியர்களின் ஈடுபாடு. கெட்டிக்காரர்கள் கொண்ட நிறுவனம் மைக்ரோசாஃப்ட், நிறுவன பங்குகளை ஊழியர்களுக்கு வழங்கி அவர்களையும் நிறுவனத்தின் உரிமையாளராக்கியிருக்கிறார்.
அவர்கள் ஈடுபாட்டுடன் உழைக்கக் கேட்பானேன்? மைக்ரோசாஃப்டில் பணத்தைத் தாராளமாய் செலவிட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள்
பில்கேட்ஸ சின் வளர்ச்சிக்குக் காரணம் புதிது புதிதாய்க் கண்டு பிடித்துக் கொண்டிருப்பது. பில்கேட்ஸ் 50 கோடி ரூபாய் செலவழித்துத் தம்முடைய வீட்டைக் கட்டியிருந்தாலும் பணத்தை சிக்கனமாய் பயன்படுத்துகிறவர்.
நேரத்திலும் சிக்கனம். 10 மணி பிளேனைப் பிடிக்கத் தமது அலுவலகத்திலிருந்து 9.50க்குத்தான் புறப்படுவார். பில்கேட்ஸ் ரொம்ப எளிமையானவர். பிரத்யேகக் காரியதரிசியெல்லாம் வைத்துக் கொள்ளவில்லை, ஒரேயொரு உதவியாளர் மட்டுமே.
இ-மெயில்களுக்குத் தாமே பதிலளிக்கிறார். 'மெமோ'க்களையும் கடிதங்களையும் தமது கைப்பட 'டைப்' செய்து விடுவார். அவர் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் மட்டுமல்ல, தேர்ந்த வியாபாரியும் கூட.
தம்முடைய ஊழியர்களின் பணியை, திறமையை அவர் வாயால் பாராட்டுவதில்லை, செயலால் பாராட்டி விடுவார். அதே சமயம் ஊழியர்களில் யாருடைய பணியிலேனும் தொய்வு இருப்பது தெரிந்தால் தயங்காமல் வேலையை விட்டு நீக்கி விடுவார்.
மைக்ரோசாஃப்டில் குழுக்களாய் பிரிந்து வேலை செய்கிறார்கள். அதனால் பலருடைய திறமையும் ஒருங்கிணைக்கப்படுகிறது. பில்கேட்ஸும் சரி அவருடைய நிறுவனமும் சரி சவால்களை அதிகம் சந்திப்பதால் அதிக ஆற்றலுடன் திகழ முடிகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக