முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Passive income (செயலற்ற வருமானத்தின் சக்தியைத் திறத்தல் ஒரு தொடக்க வழிகாட்டி)

படம்
 Passive income  செயலற்ற வருமானத்தின் சக்தியைத் திறத்தல் ஒரு தொடக்க வழிகாட்டி (Passive-செயலற்ற) (This content only for educational purpose) நீங்கள் தூங்கும் போது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எப்போதாவது கனவு கண்டிருக்கிறீர்களா? இது உண்மையாக இருப்பது மிகவும் நன்றாகத் தோன்றலாம், ஆனால் அதுவே செயலற்ற வருமானத்தின் கவர்ச்சியாகும். இந்த உற்சாகமான உலகிற்குள் நுழைந்து, தானியங்கி விமானத்தில் நீங்கள் எவ்வாறு செல்வத்தை உருவாக்கத் தொடங்கலாம் என்பதைக் கண்டுபிடிப்போம்! செயலற்ற வருமானம் என்றால் என்ன? செயலற்ற வருமானம் என்பது ஒரு அயராத ஊழியர் உங்களுக்காக 24/7 வேலை செய்வது போன்றது. இது குறைந்தபட்ச தொடர்ச்சியான முயற்சியால் சம்பாதிக்கப்பட்ட பணம், பெரும்பாலும் முதலீடுகள் அல்லது வணிக முயற்சிகளிலிருந்து, ஆரம்ப வேலை முடிந்த பிறகும் தொடர்ந்து வருவாயை ஈட்டுகிறது. ஆண்டுதோறும் பழம் தரும் ஒரு மரத்தை நடவு செய்வதை கற்பனை செய்து பாருங்கள்-அது சுருக்கமாக செயலற்ற வருமானம்! பிரபலமான செயலற்ற வருமான ஆதாரங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகள் நீங்கள் சொத்துக்களை வாங்கி வாடகை வசூலிக்கும் அந்த பழைய பலகை விளையாட்டை நினைவில் ...

Apple-ஆப்பிள் (Fruits) apple full details & benifit

                   ஆப்பிள்                                                                                   சீமையிலந்தம்பழம்                                       
                    குமளி

            அரத்திப்பழம்

                                       

                               ஆப்பிள் 


இருசொற் பெயரீடு - மாலுஸ் புமிலா


அரத்திப்பழம் (இலங்கை வழக்கு: அப்பிள்) அல்லது குமளி என்பது வருடத்திற்கொரு முறை இலையுதிரும், ரோசாசிடே குடும்பத் தாவரமாகும். சுவைமிக்க இதன் பழம் குமளிப்பழம், ஆப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம், ஆப்பிள் அல்லது அப்பிள் என அழைக்கப்படுகின்றது. பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவும் காணப்படும். ஆப்பிள் பழத்தின் தோல் மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும். சதையின் உள்ளே சில சிறு விதைகள் இருக்கும்.


மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp.


ஆப்பிள் மற்ற பழங்களைப் போலப் பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பட்டாலும், அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும், சிடர் என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன.

வரலாறு


தற்போது விளைவிக்கப்படும் ஆப்பிள் Malus domestica என்ற சிற்றினத்தைச் சேர்ந்தது. இதன் முன்னோடி இனமான Malus sieversii இன்றும் மத்திய ஆசியாவில் கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா (சிஞ்சியாங் பகுதி) ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இவ்வினம் பலவிதமான அழிக்கும்பூச்சிகளையும் நோய்களையும் தாங்க வல்லது. இதனால் இன்றும் இவ்வினம் ஆப்பிள் ஆராய்ச்சியில் பயன்படுகிறது. மேலும் Malus baccata மற்றும் Malus sylvestris ஆகிய ஆப்பிள் சிற்றினங்களும் கலப்புவிருத்தி செய்து புதிய ஆப்பிள் இரகங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.


அனேகமாக, தோடை வகை மரங்களுக்கு அடுத்ததாக, ஆப்பிள்தான் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து பயிர் செய்யப்பட்டு வரும் மரமாக இருக்கும் எனலாம். ஆசியா, ஐரோப்பா, அர்ஜென்டினா போன்ற இடங்களில் வசித்த மக்களின் உணவில், ஆப்பிள் ஒரு முக்கியமான பழமாக இருந்துள்ளது. அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் வருகைக்குபின் ஆப்பிள் பிரபலமடைந்தது.


ஆப்பிள் என்ற சொல், பழைய ஆங்கிலச் சொல்லான aeppel (பொருள்: உருண்டை) என்ற சொல்லிலிருந்து வந்தது.


ஆப்பிள் சுவைமணங்கள்
இன்றைய ஆப்பிள்கள் முந்தைய ஆப்பிள்களை விடக் கூடுதல் இனிப்பானவை. வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பெரும்பாலும் சுவையான, புளிப்புக் குறைவான ஆப்பிள்களும், சிறுபான்மையினரால் உவர்ப்பு வகை ஆப்பிள்களும் விரும்பப்படுகின்றன. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில், மிக இனிப்பான ஆப்பிள்கள் விரும்பப்படுகின்றன.


ஆப்பிளின் சுவையும், மணமும் பெரும்பாலும் தனிமனித விருப்பத்தையே பொருத்தது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் "ரெட் டெலிசியஸ்" என்ற ஆப்பிள் இரகத்தை வளர்த்துப் புகழடைந்தது. ஆனால், அண்மையில் பல அமெரிக்கர்கள் ரெட் டெலிசியசை, பியுஜி, காலா போன்ற இரகங்களை விடக் குறைந்த தரமுள்ளதாகக் கருதுகின்றனர்.


      உயிரியல் வகைப்பாடு

திணை:

                       நிலைத்திணை

பிரிவு:

               பூக்கும் நிலைத்திணை

வகுப்பு:

                        இருவித்திலை

வரிசை:

                          ரோசாலெஸ்

குடும்பம்:

                            ரோசாசியே

துணைக்குடும்பம்:

                             மலோடியய்

பேரினம்:

                                மாலுஸ்

இனம்:

                              மா.புமிலா


நன்மைகள்:


ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.


ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.


ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.


ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். வெளிநாட்டில் அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமாக வைத்திருக்கும்  பொருள்களில் ஒன்று.


ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி  அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.


இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. எனவே நீரிழிவு உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.


ஆப்பிள் தீமைகள்


ஆப்பிளில் பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. அதோடு ஆப்பிளில் உள்ள இயற்கை சர்க்கரை, இரத்த சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Passive income (செயலற்ற வருமானத்தின் சக்தியைத் திறத்தல் ஒரு தொடக்க வழிகாட்டி)

Blog (வலைபதிவு)பிளாக் என்றால் என்ன?

தங்க வரலாறு (Gold history)